ட்விட்டரில் பட்டாஸாய் தெறிக்கும் ஒரு பெயர்’!.. சிஎஸ்கே-வில் இணையப்போகும் ‘புதுவரவு’ இவர்தானா..?

இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜோஷ் ஹேசல்வுட்டுக்கு பதிலாக சிஎஸ்கே அணி மாற்று வீரராக யாரை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Fans storm Twitter with suggestions for Hazlewood\'s replacement

Fans storm Twitter with suggestions for Hazlewood's replacement

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஷ் ஹேசல்வுட் இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா அதிகமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளதால், அதற்குத் தயாராகும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜோஷ் ஹேசல்வுட் தெரிவித்துள்ளார்.

Fans storm Twitter with suggestions for Hazlewood's replacement

இதனிடையே ஜோஷ் ஹேசல்வுட்டுக்கு மாற்று வீரராக, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸை சென்னை அணி ஒப்பந்தம் செய்திருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்த சூழ்நிலையில் இணையதளம் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ஜோஷ் ஹேசல்வுட்டுக்கு மாற்று வீரரை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், இனிமேல்தான் இதுகுறித்து முடிவெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார். அதற்குள் ஜோஷ் ஹேசல்வுட்டை சென்னை அணி எடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் டிரெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.