அடுத்தடுத்து 8 கல்யாணம்’… ‘தொட்டு தாலி கட்டிய மனைவியை மிரட்டி, கணவன் செய்ய வைத்த வேலை’… தோண்ட தோண்ட பகீர் தகவல்கள்!

தொட்டு தாலி கட்டிய கணவன் ஒரு மனைவியை இப்படி ஒரு காரியத்தைச் செய்யச் சொல்வானா என யோசிக்கும் அளவுக்கு நடந்துள்ளது இந்த சம்பவம்.

Married 8 times, man forces wives into flesh trade

ஒரு கட்டத்தில் தனது முதல் மனைவியின் மகளை பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதோடு தனது முதல் மனைவி கீதாஞ்சலி, 2வது மனைவி லட்சுமி ஆகியோரை கொலை செய்து விடுவதாக மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். அருண்குமார் மொத்தம் 8 திருமணம் செய்த நிலையில் அனைவரையும் மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடக் கட்டாயப்படுத்தியுள்ளார்.

Married 8 times, man forces wives into flesh trade

இதற்கு மேல் கொடுமையைத் தாங்க முடியாது என முடிவு செய்த முதல் மனைவி கீதாஞ்சலி, 2வது மனைவி லட்சுமி, அருண் குமார் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்கள். புகார் அளித்துள்ளதால் தங்கள் கணவரால் எங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தங்கள் புகாரில் தெரிவித்திருந்தனர். ஆனால் உள்ளூர் போலீசார் இருவரின் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Married 8 times, man forces wives into flesh trade

இதையடுத்து கீதாஞ்சலி, லட்சுமியின் புகார் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உள்ளூர் போலீசாருக்கு ஆணையர் உத்தரவிட்டார். அதோடு அருண் குமாரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். அவர் கைது செய்யப்படும் பட்சத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கீதாஞ்சலி, லட்சுமியின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத உள்ளூர் போலீசார் மீதும் நடவடிக்கை பாயும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.