அயர்லாந்துக்கு செல்லும் 26 நாடுகளின் பயணிகள்; வெளியான புதிய அறிவிப்பு!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து கொரோனா தொற்று பரவுவதை தடுக்க அயர்லாந்து அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி அயர்லாந்து நாட்டுக்கு வரும் 26 நாடுகளின் பயணிகள் தங்களை 14 நாட்கள் ஓட்டல் அறைகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் உள்ள நாடுகளின் பட்டியல் பின்வருமாறு;-

அல்பேனியா, அண்டோரா, அரூபா, பஹ்ரைன், போனைர், சிண்ட் யூஸ்டேடியஸ் மற்றும் சாபா, இஸ்ரேல், ஜார்டன், கோசோவோ, குவைத், லெபனான், மால்டோவா, மோனாகோ, மாண்டெனெக்ரோ, நைஜீரியா, வடக்கு மாசிடோனியா, ஓமன், பாலஸ்தீன், பிலிப்பைன்ஸ், போர்டா ரிக்கோ, கதார், செயிண்ட் லூசியா, சான் மாரினோ, செர்பியா, சோமாலியா, வாலிஸ் மற்றும் ஃபுட்டுனா தீவுகள்.

மேற்கண்ட நாடுகளில் இருந்து அயர்லாந்துக்கு வரும் பயணிகள், கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு 14 நாட்கள் ஓட்டல் அறைகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அயர்லாந்து நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.