பக்கா பிறாடாம் இந்த இராயப்பு ஜோசப்பு; பல குடும்பங்களை தனது பேராசைக்காக நடுத்தெருவுக்கு கொண்டு வந்தவராம்!

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் நேற்றையதினம் யாழ் திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளதாக மன்னார் ஆயரில்லம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து அரசியல் பிரமுகர், பொதுமக்களென பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இளைஞன் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.

குறித்த முகநூல் பதிவு பின்வருமாறு,

இந்த பதிவிற்கு பலர் கோபப்பட்டாலும் பரவாயில்லை நானும் ஒரு கிறிஸ்தவனே இருந்தும் சில உண்மைகளை தெரியப்படுத்த தானே வேண்டும் இது எனது பார்வையில்..!

இராயப்பு யோசேப்பு எனும் இந்த தனிமனிதனின் மதவாததின் விளைவே வன்னியில் சைவ தமிழருக்கும் கிறிஸ்தவ தமிழர்களுக்கும் இடையில் பல முறுகல்களை உருவாக்கியது என்பதில் என்னை பொறுத்தவரை மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை, இதன் வெளிப்பாடே வன்னியில் சிவசேனை உருவாகியது என்பதும் முற்றிலும் உண்மையே.

பல அப்பாவி மக்களின் காணிகளை அபகரித்து பல மக்கள் இன்று வீதியில் நிற்பதற்கும் இவரே காரணம் இதில் நானும் ஒருவன் , சிங்களவர் நில ஆக்கிரமிப்பு செய்கிறான் என கோசம் போட்ட இவரும் இவருடைய சகாக்களும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மறந்து விட்டார்கள் போலும் வன்னியில் நில ஆக்கிரமிப்பின் முடிசூடா மன்னன் தான் ஆண்டகை இராயப்பு யோசேப்பு (நேரடியாக நானே பாதிக்கப்பட்டேன்).

ஆனாலும் சிலவற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன் மன்னார் தேசமானது இன்றும் எம்மைவிட சிறுபான்மையின் கைகளில் சென்றுவிடக்கூடாது என்பதில் அவர் கொண்ட அக்கறை உண்மையில் வரவேற்கத்தக்கது, அதே போல ஈழ விடுதலை போராட்டத்திற்கும் ஆண்டகை அவர்கள் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எது எப்படியாயினும் வேதாகமத்தில் கூறியதுபோல “எமக்கு தீங்கு செய்தவர்களை நாம் மன்னிப்பது போல எங்கள் பாவங்களையும் மன்னியும் …!” என்ற ஜெபத்தின் வரிகளுக்கு அமைவாக நாமும் மறந்து பரமபிதாவின் வலது பக்கத்திலே இவர் வீற்றிருக்க மன்றாடுவோமாக-ஆமென் என பதிவிட்டுள்ளார்.