மன்னார் வீதியின் இரு மருங்கிலும் கருப்புக்கொடிகள்; முன்னாள் ஆயருக்கு நாட்டி இன மத பேதம் கடந்து அஞ்சலி!

மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து பேரணியாக மன்னார் எடுத்து வரப்பட்டது.

மன்னார் மாவட்ட கத்தோலிக்க மக்கள் மட்டுமல்லாது அனைத்து மத மக்களும் இணைந்து வீதியின் இருமருங்கிலும் கருப்புக் கொடிகளை நாட்டி பேரணியில் கலந்து கொண்டனர்.

தேவன் பிட்டி பகுதிகளில் இருந்து மக்கள் மலர்தூவி மோட்டார் வண்டிகளிலும் வாகனங்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் மன்னார் ஆயர் இல்லம் வரையில் திருடலை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

ஆயருடைய திருவுடல் மக்களுடைய அஞ்சலிக்காக இன்றைய தினம் மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது அரசியல் பிரமுகர்கள் அரச அதிகாரிகள் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் உட்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.