கவனமாக இருங்க’!.. சச்சின் டெண்டுல்கர் திடீர் அறிவிப்பு..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Sachin Tendulkar hospitalised as precautionary measure

Sachin Tendulkar hospitalised as precautionary measure

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி தெரிவித்திருந்தார். இதனை அடுத்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,‘உங்களது பிரார்த்தனை மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி. மருத்துவ ஆலோசனையின்படி, கூடுதல் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அடுத்த சில நாட்களில் நான் வீடு திரும்புவேன் என நம்புகிறேன். ஒவ்வொருவரும் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருங்கள்’ என சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார்.