இப்படி ஒரு காய்கறி இருக்குன்னே யாருக்கும் தெரியல…’ ‘ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்…’ ‘இதுக்கு செம டிமான்ட்…’ இதுல அப்படி என்ன இருக்கு…? – மாஸ் காட்டும் இளைஞர்…!

பிகார் மாநிலத்தில் லட்ச ரூபாய் மதிப்புடைய காய்கறிகளை பயிர் செய்யும் விவசாயி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார்.

Bihar A farmer grows vegetables worth lakhs rupees

Bihar A farmer grows vegetables worth lakhs rupees

இவர் விளைவிக்கும் ‘ஹாப் ஷூட்ஸ்’ (Hop Shoots) என்னும் காய்கறி உலகிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட காய்கறி என கூறப்படுகிறது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை பூர்வீகமாக கொண்ட ஹாப் ஷூட்ஸ் காய்கறி டிபி நோய்க்கு எதிராக ஆன்டி பாக்டீரியாவாக பயன்படுகிறது.

இந்த காய்கறியில் இருக்கும் ஆசிட் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியவை. லூகீமியா செல்களை தடுக்கக்கூடியவை. மேலும் இவை பீர் பானத்தின் சுவையை கூட்டுவதற்கு, பானத்தின் நிலைத்தன்மையை பாதுகாப்பதற்கு பெரிதும் உதவுகிறது.

Bihar A farmer grows vegetables worth lakhs rupees

இந்த காய்கறி உற்பத்திக்கு அம்ரேஷ் சிங், சுமார் ரூ.2.5 லட்சம் செலவிட்டுள்ளார். இதையடுத்து 60 சதவீத அறுவடை நல்ல முறையில் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். சர்வதேச அளவில் பெரிய தேவை நிலவும் இந்த காய்கறி குறித்து யாரும் அவ்வளவாக தெரியாத நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாகு தனது ட்விட்டரில் பதிவிட்டவுடன், அம்ரேஷ் சிங் விளைவித்த காய்கறிக்கு நல்ல விலை கிடைத்துள்ளதாகவும், நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறதாகவும் அம்ரேஷ் சிங் கூறியுள்ளார்.