நீங்க வேறலெவல் நட்டு’!.. தார் காரை பரிசாக கொடுத்த ஆனந்த் மஹிந்திராவுக்கு நடராஜன் கொடுத்த ‘ஸ்பெஷல்’ கிப்ட் என்ன தெரியுமா..?

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தனக்கு பரிசாக வந்த காரை தனது பயிற்சியாளருக்கு கொடுத்து  அழகு பார்த்துள்ளார்.

T Natarajan thanks Anand Mahindra for Thar SUV

T Natarajan thanks Anand Mahindra for Thar SUV

அவர் சொன்னபடியே ஐபிஎல் தொடர் முடிந்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நெட் பந்துவீச்சளராக வாய்ப்பு பெற்ற நடராஜன், முதன் முதலாக இந்திய அணியில் காலடி எடுத்து வைத்தார். அந்த தொடரில் பந்துவீச்சாளர் ஒருவர் காயம் காரணமாக விலகியதை அடுத்து, டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு பெற்றார்.

T Natarajan thanks Anand Mahindra for Thar SUV

அதனைத் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் வாய்ப்பு பெற்று தனது திறமையை நிரூபித்தார். இதன்மூலம் நெட் பவுலராக சென்று, ஒரே தொடரில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிய வீரர் என்ற சாதனையை நடராஜன் படைத்தார்.

T Natarajan thanks Anand Mahindra for Thar SUV

இந்த நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய அறிமுக வீரர்களான நடராஜன், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சுப்மான் கில், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் ஆகிய இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அனைவருக்கும் கார் பரிசாக வழங்குவதாக மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த மகேந்திரா அறிவித்திருந்தார்.

T Natarajan thanks Anand Mahindra for Thar SUV

இதனை அடுத்து தமிழக வீரர் நடராஜனுக்கு மஹிந்திராவின் புதிய மாடலான தார் காரை பரிசாக அந்நிறுவனம் அளித்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் பரிசளித்த காரை தனது பயிற்சியாளரும், நலம் விரும்பியுமான ஜெயபிரகாஷ் என்பவருக்கு நடராஜன் வழங்கி அழகு பார்த்தார். நடராஜனின் இந்த அன்பை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

T Natarajan thanks Anand Mahindra for Thar SUV

இந்த நிலையில் தனக்கு காரை பரிசாக வழங்கிய மஹிந்திரா நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தனது கையெழுத்து பதித்த டெஸ்ட் டி-சர்ட்டை அந்நிறுவனத்துக்கு நடராஜன் பரிசாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து நடராஜன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடராஜன், ‘இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடுவது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம். எனது வாழ்வில், நான் பெற்ற அன்பும் பாசமும் என்னை மூழ்கடித்தன. அற்புதமான நபர்களின் ஆதரவும் ஊக்கமும், எனக்கு நல்ல வழிகளைக் கண்டறிய உதவுகிறது. தற்போது எனது எழுச்சி அசாதாரண பாதையில் உள்ளது’ என பதிவிட்டுள்ளார்.