மேலும் 25 பேருக்கு மூளையில் ரத்தக் கட்டி- ஆஸ்ரா செனிக்கா 45 வயதுக்கு குறைவான நபர்களை தாக்குகிறதா ?

பிரித்தானியாவில் மேலும் 25 பேருக்கு மூளையில் ரத்தக் கட்டிகள் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே ஆஸ்ரா செனிக்கா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள் என்பதனை, பிரித்தானிய சுகாதார துறையின் ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை. 30 மில்லியன் மக்களுக்கு ஆஸ்ரா செனிக்கா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில். அதில் 30 பேருக்கு மூளையில் ரத்தம் உறைந்து கட்டிகளை ஏற்படுத்தி உள்ளது என்றும். இது 0.04% விகிதமே என்றும் கூறியுள்ளது ஆஸ்ரா செனிக்கா நிறுவனம். NHS: Under-45s are up to 35 TIMES more likely to die of Covid than develop a brain blood clot after AstraZeneca’s jab, figures suggest as UK regulator spots 25 more cases of rare complications.

இருப்பினும் தமது ஆராட்சியின் அடிப்படையில், 25 தொடக்கம் 45 வயது நபர்கள் பலருக்கே இவ்வாறு ரத்தக் கட்டிகள் உருவாகியுளதாக அன் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. ஏன் ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும் இவ்வாறு மூளையில் ரத்தக் கட்டிகள் ஏற்படுகிறது என்பது இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. எனவே தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், இளம் வயதினர் பைசர் அல்லது மொடரீனா ஊசிகளை எடுப்பது நல்லது. அதனை நீங்கள் சற்று பொறுத்திருந்தும் எடுத்துக் கொள்ள முடியும்.

மூளையில் ரத்தம் உறைந்தால் என்ன அறிகிறிகள் தோன்றும் ?

திடீரென கடும் தலை வலி தோன்றும், திடீரென பேச முடியாத நிலை. அல்லது பேசும் போது வார்த்தைகள் கோர்வையாக வராது. மேலும் திடீர் பார்வை குறைபாடுகள். தலைச்சுற்று. இதுபோன்ற அறிகுறிகள் ஆஸ்ரா செனிக்கா எடுத்த பின்னர் தோன்றினால் உடனே வைத்தியரை அணுகவும். இல்லையென்றால் 999 க்கு டயல் செய்து ஆம்பூலன்ஸை வரவளைக்கவும் முடியும்.