தூக்கிப் போட்டு மிதித்தால்… கர்நாடக முகம் இருக்கு காட்ட வேண்டம் என நினைக்கிறேன் தம்பி !

அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பிரசாரத்தில் அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அந்தக் காணொளியில் பேசும் அண்ணாமலை, “செந்தில் பாலாஜியைத் தூக்கிப் போட்டு மிதித்தால் பல்லெல்லாம் வெளியே வந்துவிடும்.

உன்னை மாதிரி எவ்வளவு ஃப்ராடெல்லாம் பார்த்துவிட்டுவந்திருப்பேன். நீங்கள்ளாம் ஒரு ஆளுங்க.. நீங்கள்ளாம் ஒரு இது. உனக்கு பயந்து கைய வச்சா, அண்ணாமலை வயலன்ஸ் பன்றேன்னு மாத்துவியாம். இங்கிருக்கிற திமுக காரங்களுக்கு ஒரு எச்சரிக்கையை வச்சிட்டுப் போறேன். நான் வன்மத்தை (வன்முறையை) கையில் எடுப்பதற்குத் தயாராகக் கிடையாது. அகிம்சை வாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறேன்.

எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது கர்நாடகா முகம். அதை இங்கே காட்டவேண்டாம்னு நினைக்கிறேன். வந்து வீடியோ எடுப்பியா. எடுத்துகிட்டுபோ. எலக்ஷன் கமிஷன்ல குடுப்பியா குடுத்துட்டுப் போ” என்று அவர் தேர்தல் பிரசாரத்தில் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

இதனிடையே இந்தப் பேச்சு பதில் கொடுக்கும் வகையில் பிரசாரத்தில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர், மகளிரணிச் செயலாளர் கனிமொழி, “எனக்கு இன்னொரு முகம் இருக்கு, செந்தில் பாலாஜியை அடிச்சிடுவேன் என்று… இப்படிப்படிப்பட்டவர்களெல்லாம்… நீ தொட்டுப் பாரு தம்பி. திமுக காரன் மேல கைய வச்சிப் பாரு…. உடன் பிறப்புகளை யாரும் மிரட்ட முடியாது. மிரட்டினால், எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள்” என்று பேசியுள்ளார்.