மெகா ஸ்டார் குடும்பத்தில் மருமகளாகும் அனு இம்மானுவேல் ? பேச்சு உண்மைதான்

சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தின் நாயகி அனு இம்மானுவேல், தற்போது சித்தார்த்தின் ‘மகாசமுத்திரம்’ படத்தில் நாயகியாக நடித்து வரும் நிலையில், நடிகை அனு இம்மானுவேலும், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷும் ரகசியமாக காதலித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் அனு இம்மானுவேலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி அல்லு சிரிஷ் ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில் இருவரும் சகஜமாக பழகுவது, ஒருவரையொருவர் செல்லமாக அழைத்துக்கொள்வது போன்றவை இடம்பெற்றன. இதைக் கண்ட ரசிகர்கள் மற்றும் திரையுலகினர், இருவரும் காதலிப்பதை இந்த வீடியோ மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக பரவலாக பேசி வருகின்றனர். நடிகர் அல்லு சிரிஷ் சிரஞ்சீவியின் மைத்துனரும், அல்லு அர்ஜுனின் சகோதரரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.