வெளிநாட்டு பயணங்களுக்கு பச்சைக் கொடி காட்டிய பொறிஸ் ஜோன்சன்: மே 17 முதல் போகலாம் !

வரும் 9ம் திகதி ஏப்பிரல் மாதம் முதல், வெளிநாடு செல்வோர் தகுந்த ஆதாரங்களை காட்ட வேண்டும். இல்லையேல் அபராதம் விதிக்கப்படும் என்ற கடும் கட்டுப்பாடு லண்டனில் நிலவி வரும் நிலையில். இந்த வெளிநாடு பயண தடை ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கப்படலாம் என்று, முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தற்போது பிரித்தானியாவில் கொரோனா தொற்று வெகுவாக குறைவடைந்து. சாவு எண்ணிக்கையும் வெகுவாக குறைவடைவதனால், வரும் மே மாதம் 17 தொடக்கம் வெளிநாட்டு பயண தடையை இலகுவாக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.  PM OFFICE:  Foreign holidays on track to start May 17! Boris is on course to give the green light to trips abroad under a traffic light system after success of the vaccine rollout and Covid-19 deaths falling.

இதற்காக பச்சைக் கொடியை பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் காட்டியுள்ளார். இருப்பினும் ராஃபிக் சிக்னல் போன்று, மெதுவாக இந்த தடையை தளர்த்த அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. முதலில் சில நாடுகளுக்கு பயணத் தடையை நீக்கி, பின்னர் படிப்படியாக ஏனைய நாடுகளுக்கும் நீக்க பொறிஸ் திட்டம் தீட்டி வருகிறார் என்று மேலும் அறியப்படுகிறது.