தெரியாத நம்பர்ல இருந்து வந்த போன்கால்…’ இப்படி நம்ப வச்சு சீட் பண்ணிட்டாங்களே…! ‘கதறிய பெண்மணி…’ யாரு ‘இத’ பண்ணது…? – ஒருவழியா கெடச்ச சின்ன க்ளூ…!

சென்னை மந்தவெளி, திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுதா (67). இவர் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார்.

Delhi gang who swindled Rs 2.13 crore Speaking from LIC

என்னிடம் நூதன முறையில் ரூ. 2 கோடியே 13 லட்சத்தை மோசடி செய்து விட்டனர்” எனக் கூறியிருந்தார். அந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடித்தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.குற்றவாளிகள் டெல்லியில் பதுங்கியிருப்பது போலீசாரின் புலனாய்வில் தெரியவந்தது. அதனையடுத்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் வித்யா ஜெயந்த் குல்கர்னி, துணை ஆணையர் நாகஜோதி மேற்பார்வையில், உதவிக்கமிஷனர் பிரபாகரன்  தலைமையிலான தனிப்படை கடந்த 17ம் தேதியன்று டெல்லிக்கு விரைந்தனர்.

Delhi gang who swindled Rs 2.13 crore Speaking from LIC

அங்கு பல்வேறு இடங்களில் தங்களுடைய பெயர் மற்றும் விலாசத்தை மறைத்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் அமன்பிரசாத், பிரதீப்குமார், மனோஜ்குமார், குபீர்சர்மா என்ற பிரின்ஸ், ஹீமன்சு தாஹி, ராம்பால் ஆகிய ஆறு பேரை கைது செய்து, புதுடெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.