நெஞ்சில் குத்திய டாட்டூவை காட்டிய ரோஜா சீரியல் பிரியங்கா.. ஆட்டம் கண்ட இணையதளம்

பிரியங்கா – சமீபகாலமாக திரைத்துறையில் உள்ள நடிகர்களை விட சின்னத்திரையில்யிருக்கும் நடிகர் நடிகைகளுக்கு தற்போது அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் தற்போது கூட  ஒரு காலத்தில் பிரபலமாகயிருந்த நடிகர்-நடிகைகள் தற்போது சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி சீரியலில் நடித்து வருகின்றனர். தமிழ் ரசிகர்கள் அதிகமாக விரும்பி பார்க்க கூடிய சீரியல் தான் ரோஜா.

இந்த சீரியல் எதற்காக பிரபலமடைந்ததோ இல்லையோ கதாநாயகியாக நடித்த பிரியங்காவிற்கும் அவரது ரொமான்ஸ்க்கு மட்டுமே இந்த சீரியல் இளைஞர்களிடம் மிகவும்  பிரபலமானது. அதுமட்டுமில்லாமல் சன் டிவியில் ஓரளவுக்கு ரசிகர் வைத்துள்ள சீரியல் என்றால் அது ரோஜா சீரியல் தான். தற்போது சின்னத்திரை நடிகைகள் பலரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.

சின்னத்திரை நடிகைகள் பொருத்தவரை ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதில் கெட்டிக்காரர்கள் தான். அந்த வரிசையில் பிரியங்கா ஒன்றும் விதிவிலக்கல்ல அதாவது பிரியங்கா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் டேட்டு குத்திய புகைப்படத்துடன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள் அவர் என்ன டாட்டூ குத்தியுள்ளார் என்பதை ஆராய்வதற்காக உற்று உற்றுப் பார்ப்பது மட்டுமில்லாமல் பலரும் அது என்ன டாட்டூ என்று தயவு செய்து கூறுங்கள் எனவும் கூறி வருகின்றனர்.