சினிமாவில் அறிமுகமாகும் சந்தனக்கடத்தல் வீரப்பனின் மகள்! இது தான் இப்ப ரென்டான செய்தி…

சந்தனக்கடத்தல் வீரப்பன் தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். பல வருடங்களாக தமிழகம், கர்நாடகம், கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். சில நூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார். 130 கோடி மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதற்காக தேடப்பட்டு வந்த வீரப்பன், 2004-ல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.

வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று 2 மகள்கள் உள்ளனர். இதில் வித்யாராணி கடந்த வருடம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார்.

அவர் நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை இயக்கி உள்ள கே.என்.ஆர்.ராஜா, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். விஜயலட்சுமி தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்தபடி நிற்கிறார் விஜயலட்சுமி.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் பணியாற்றி வரும் விஜயலட்சுமி, பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகள் எந்தளவுக்கு முக்கியம் என்பதை மையப்படுத்திய ‘மாவீரன் பிள்ளை’ படத்தில் நடித்துள்ளார். இதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. மது ஒழிப்பு, விவசாயிகள் மற்றும் தண்ணீர் பிரச்னை ஆகிவற்றை பேசும் இப்படத்தில் வீரப்பனின் மகள் நடித்துள்ளதால், ‘மாவீரன் பிள்ளை’ படத்துக்கு ஒருவித எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.