வீட்டில் தனியாக இருந்த பெடியன் மரணம்: இது எப்படி நடந்து என்று தெரியாமல் திணறும் பொலிஸ்

யாழ் குடத்தனைப் பகுதியில், தனியாக வீட்டில் இருந்த 23 வயது தமிழ் இளைஞர் ஒருவர் மரணமாகியுள்ளார். குடத்தனையை சேர்ந்த 23 வயதாகும் முகுந்தன் சுலக்ஸ்ஷன் என்னும் இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டார், என்று அதிர்வு இணையம் அறிகிறது.  இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

அவர் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்று தெரியவில்லை என்றும். அவர் ஏன் தனிமையில் இருந்தார் என்றும் தெரியவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இது மிகவும் மர்மமான முறையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ள நிலையில். உடலை பகுப்பாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்கள். மருத்துவரது அறிக்கையின் பின்னரே விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்று பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.