இலங்கை அரசிடம் இனி டாலர்கள் இல்லை- தமிழர்களே காசை அனுப்புவது ஜாக்கிரதை !

இலங்கையில் இது வரை காலமும் அமெரிக்க டாலரின் மதிப்பு 178/= தொடக்கம் 180/= ரூபாவாக இருந்து வந்த நிலையில். அது 200 ரூபாவாக மாறியுள்ளது. இலங்கை அரசிடம் இனி அமெரிக்க டாலர்கள்( அதாவது அன்னியச் செலாவணி) இல்லை. இதன் காரணத்தால் இலங்கை அரசு கார் டயர்கள் இறக்குமதியை நிறுத்தி 2 மாதங்கள் ஆகிறது என்ற விடையம் பலருக்கு தெரியாது. இது போல பல வெளிநாட்டு இறக்குமதிகளை இலங்கை அரசு தவிர்த்து வருகிறது. ஆனால் இலங்கை அரசுக்கு கிடைக்கும் பெரும் வெளிநாட்டு காசு எது தெரியுமா மக்களே ? அது தமிழர்கள் ஆகிய நீங்கள் ஊருக்கு அனுப்பும் காசு தான்.

அதனை நம்பியே தற்போது கோட்டபாய அரசு இயங்கி வருகிறது. எனவே தமிழர்களே தயவு செய்து கோட்டபாய அரசுக்கு உதவவேண்டாம். அப்படி என்றால் காசை உங்கள் உறவுகளுக்கு எப்படி அனுப்புவது ? என்ற கேள்வி எழுகிறது அல்லவா ? நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கை பாவித்து. உதாரணமாக நீங்கள் லண்டனில் HSBC வங்கிக் கணக்கை வைத்திருக்கிறீர்கள் என்றால். அதில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பணத்தை அனுப்புவதை நிறுத்துங்கள். வேறு வழிகளை பாவித்து காசை அனுப்புங்கள். நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உதாரணமாக உண்டி****ல் .

இதனூடாக 2 நன்மைகள் கிட்டும். ஒன்று(1) இலங்கையின் பணம் மேலும் வீழ்ச்சி கண்டு பிரித்தானிய பவுண்டுகள் 300 ரூபா வரை செல்லும். அமெரிக்க டாலார் 250 ரூபா வரை செல்லும். அத்தோடு இலங்கை அரசால் வெளிநாட்டு பொருட்களை கொள்வனவு செய்ய முடியாமல் போகும். இதனால் சிங்கள மக்களே கோட்டபாய அரசின் கையாலாக தனத்தை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பிப்பார்கள். இது போக அரிசியை மியான்மாரில் இருந்தும், பருப்பை பங்களாதேஷில் இருந்தும் இலங்கை இறக்குமதி செய்கிறது என்பது தான் வேடிக்கை.

மட்டக்களப்பு , திருகோணமலை வவுனியா என்று எத்தனை ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் அரிசியை தமிழர்கள் பயிரிட்டால் மொத்த  நாட்டுக்கே சோறு கொடுக்க முடியும். ஆனால் அந்த நிலங்களை  எல்லாவற்றையும் கோட்டபாய அரசு அபகரித்து சிங்கள குடும்பங்களை குடியேற்ற உதவிவருகிறது.. அவர் பயிர் செய்கைக்கு எந்த ஒரு முக்கியத்துவத்தையும் கொடுகவே இல்லை. எனவே இலங்கையில் தற்போது தான்,  கார் வைத்திருக்கும் சிங்கள மக்கள் டயர் மாற்ற முடியாமல் அல்லாடுகிறார்கள். நாடு எந்த நிலையில் உள்ளது என்று எண்ணி யோசிக்க ஆரம்பித்துள்ளார்கள். அது வெகு விரைவில் அரிசி பருப்பு வாங்கும் சாமானிய சிங்கள மக்களுக்கும் புரியவேண்டும். அப்படி என்றால் தான் நாம் வெற்றி பெறுவோம் தமிழர்களே.

ஆயுதன் ஏந்தி போராடுவது என்பது ஒரு வகை. அதனை எல்லோராலும் செய்ய முடியாது. ஆனால் சற்று எமது மூளை பாவித்தால் போதும். எந்த கொம்பனையும் வீழ்த்தி விட முடியும். விழிப்போம் தமிழர்களே… எனவே தமிழர்களே… தயவு செய்து உங்களுக்கு கொஞ்சமாவது தமிழ் தேசிய உணர்வு இருந்தால் இந்த கால கட்டத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்யுங்கள்.  ஆயுத போராட்ட காலம் போய், கத்தி இன்றி யுத்தம் இன்றி ஒரு போரை ஆரம்பிப்போம்…

அதிர்வுக்காக
கண்ணன்