வீட்டுக் காவலில் ஜோர்தான் இளவரசர் ஹம்சா ஏன் என்று தெரியுமா ?

வீட்டுக் காவலில் ஜோர்தான் இளவரசர் ஹம்சா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அதிர்வு இணையம் அறிகிறது. வழக்­க­றி­ஞர் மூலம் பிபிசிக்கு அனுப்பிய காணொ­ளி­யில் தான் வெளியே செல்ல அனுமதியில்லை என்று திரு ஹம்சா கூறியிருந்தார். நாட்டின் தலைவர்கள் ஊழலில் திளைப்பதாகவும் திறனற்ற ஆட்சி நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆட்­சிக் கவிழ்ப்பு சதித் திட்­டத்­தின் தொடர்­பில் ஹம்சா உட்பட பல உயர்மட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹம்சா வீட்­டுக்­கா­வ­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­பட்­டதை ராணு­வம் மறுத்துள்ளது.நாட்­டின் பாது­காப்பு, நிலைத்­தன்­மை­யைப்­ பாதிக்­கும் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் நிறுத்­து­மாறு அவ­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­ட­தாக ராணுவம் கூறி­யது.

ஆனால் எந்­த­வித சதித் திட்­டத்­தி­லும் ஈடுபடவில்லை என்று இளவரசர் ஹம்சா கூறினார்.இதற்­கி­டையே எகிப்து, சவூதி அரே­பியா உள்­ளிட்ட வட்­டார நாடு­கள் தற்­போ­தைய மன்­னர் அப்­துல்­லா­வுக்­கான தங்களுடைய ஆத­ரவை மறு­வு­றுதிப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். ஐஎஸ் பயங்­க­ர­வாத அமைப்­புக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­யில் ஜோர்­தா­னும் கூட்டு சேர்ந்­துள்ள அமெ­ரிக்­கா­வும் ஜோர்­தான் மன்­னர் அமெரிக்கா­வின் முக்­கிய பங்­காளி என்­றும் மன்­ன­ருக்கு முழு ஆத­ரவு உண்டு என்­றும் தெரி­வித்­துள்­ளது.

காலஞ்­சென்ற மன்­னர் ஹுசைன் மற்­றும் அவருக்குப் பிடித்தமான மனைவியான அர­சி­யார் நூர் தம்பதியரின் கடைசி மகன் ஹம்சா.இங்­கி­லாந்­தில் படித்து அவர் பட்­டம் பெற்­றுள்­ளார். அமெ­ரிக்­கா­வில் உள்ள ஹார்­வர்ட் பல்­க­லைக் கழ­கத்­தி­லும் அவர் படித்­துள்­ளார்.மன்­ன­ரின் அன்­புக்­கு­ரிய மகனாக விளங்கிய ஹம்சா 1999ல் பட்­டத்து இள­வ­ர­ச­ராக பெயர் குறிப்­பி­டப்­பட்­டார்.

ஆனால் மன்­னர் ஹுசைன் மறைந்த நேரத்­தில் வாரிசு என்று முடி­சூட்ட ஹம்சா மிக­வும் இள­மை­யா­க­வும் அனு­ப­வ­மற்­ற­வ­ரா­க­வும் கருதப்பட்டார். இதனால் அவ­ரது ஒன்­று­விட்ட சகோ­த­ரர் அப்­துல்லா அரி­யணை ­ஏறி­னார். 2004ல் ஹம்­சா­வின் இள­வ­ர­சர் பட்­டம் பறிக்கப் பட்டது.