தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர்களால் ஏற்பட்ட பரபரப்பு..!

உயிர்த்த ஞாயிறுத் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை ​களுத்துறை – ஹொரணை கல் எதடுகொட சென். பொரஸ்ட் தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஹொரனை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் தேவாலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இவ்விருவரும், தேவாலயத்துக்குள் நுழையும் வீதியின் ஊடாக செல்வதற்கு முயன்றுள்ளனர்.

அத்தோடு அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் சந்தேகத்தின் போரில் இருவரை கைது செய்துள்ளனர். இதனால் அங்கு சற்று பதற்றமும் பரபரப்பான நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்த தேவாலயத்தின் பாதுகாப்புக்காக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளன.