ஷெல் எரிபொருள் நிலையத்திற்குள் திரும்ப முயன்ற முதியவர் கார் மீது மோதிய அம்பூலன்ஸ் வாகனம் !

ஷெல் எரிபொருள் நிரப்பும் நிலையத்தினுள் செல்ல முயன்ற முதியவர் ஒருவரின் காரின் மீது, மிக வேகமாக வந்த அம்பூலன்ஸ் மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அம்பூலன்ஸ் சாரதி அதனை தடுக்க முயன்றும் பலன் இன்றிப் போய்விட்டது. முதியவர் வேகமாக வந்த அம்பூலன்ஸ் வாகனத்தை கவனிக்காமல் காரை எரிபொருள் நிரப்பும் நிலையத்தினுள் செலுத்த முற்பட்டதால் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. CCTV கமராவில் பதிவாகியுள்ள இந்த விபத்தின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. குறித்த சம்பவம் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்றுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. வீடியோ கீழே இணைப்பு.