நாடு கடத்தப்பட்டு கொழும்பு வந்த 2 பேரிடம் ஆதாரம் சிக்கியது – புலனாய்வு பெரும் அலேட் !

அரபு நாட்டில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட 2 பேரை சிங்கள புலனாய்வுத்துறை கடுமையாக விசாரித்த வேளை பல ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஐக்கிய அரபு ராட்சியத்தில் இருந்து, குறித்த 2 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள். விசா முடிவடைந்தும் அவர்கள் மறைந்து வாழ்ந்து வந்த நிலையில் தான் இந்த நாடு கடத்தல் நிகழ்ந்துள்ளது. அவர்கள் கொழும்பு வந்தவேளை கொண்டு வந்த மடிக் கணணியில்(லேப்-டாப்) முதலில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதனை ஆராந்தவேளை அவர்கள் மிகவும் பதற்றமடைவதை பார்த்த, அதிகாரிகள் மேலும் தேட ஆரம்பித்தார்கள். ஆனால் முதலில் எதுவும் சிக்கவில்லை. பின்னர் கணணி நிபுணர்கள் வரவளைக்கப்பட்டு மேலதிகமாக தேடிய வேளை. உரு மறைப்பு செய்யப்பட்ட பல பைல்கள் இருந்துள்ளது. அதனை சாதாரண முறையில் பார்த்தால் தெரியாது. அதில் அவர்கள் அல்-கைடா தீவிரவாதிகளோடு தொடர்பில் இருந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அழிக்கப்பட்ட அரட்டை உரையாடல்கள் பலவற்றை புலனாய்வு அதிகாரிகள் மீட்டு எடுத்து வாசித்த வேளை. இன் நபர்கள் இலங்கையில் தாக்குதல் திட்டம் ஒன்றை தீட்ட, முஸ்தீப்பு எடுத்த விடையமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இவர்கள் இருவரும் ஜிகாத் போதனைகளை கேட்டு, அதனை பின் பற்றி வரும் நபர்கள் என்பதும் தெரியவந்துள்ளதை அடுத்து. கொழும்பு பெரும் பரபரப்பில் உள்ளது. இலங்கையில் இருந்து அரபு நாடுகளுக்கு சென்றுள்ள இளைஞர்களின் முழு விபரங்களையும் திரட்ட வேண்டிய கட்டாய நிலைப்பாட்டில் தாம் உள்ளதாக, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் எமது புலனாய்வு செய்தியாளருக்கு தெரிவித்துள்ளார்.