துல்லிய தாக்குதல்- தாமே டிப்ஸ் கொடுத்து இந்திய ராணுவத்தை வரவளைத்து கொலை செய்த மாவோ­யிஸ்­டுகள் !

இந்திய அரசு கூறுவது போல முகாம் இட்டு இருந்த மாவோ­யிஸ்­டுகளை பிடிக்க இந்திய ராணுவம் செல்லவில்லை. மாறாக அவர்கள் தான் இந்திர ராணுவத்தை ஒரு இடத்திற்கு வரவளைத்து பொறிக்குள் சிக்கவைத்து. பின்னர் 22 இந்திய ராணுவத்தை சுட்டும் கொன்றுள்ளார்கள். இதில் மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளார்கள் என்பது தான் நிஜம்.

என்ன நடந்தது ?

நேற்று முன்­தி­னம் சத்­தீஸ்­கர் மாநி­லத்­தில் உள்ள பிஜா­பூர்-சுக்மா எல்­லைப் பகு­தி­யில் மாவோ­யிஸ்­டு­கள் அதி­க­ள­வில் முகா­மிட்­டி­ருப்­பதாக துப்பு கிடைத்துள்ளது. இதனை நம்பி எந்த ஒரு தயார்படுத்தலும் இன்றி அவரசமாக சுமார் 1,500 ராணுவத்தினர் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளார்கள். ராணுவம் எந்த வழியில் வரும், அவர்களை எப்படி தாக்க வேண்டும் என்று மாவோ­யிஸ்­டுகள் முதலிலேயே திட்டம் போட்டு. ஸ்கெச் போட்டு ஒரு இடத்தை தெரிவு செய்தும் வைத்திருந்துள்ளார்கள். இந்திர ராணுவம் வந்தவேளை கண் இமைக்கும் நேரத்தில் தாக்கிவிட்டு. தப்பிச் சென்றுவிட்டார்கள்.

அவர்கள் தப்பிச் செல்ல ஏதுவான ஒரு இடத்தை தான் முன்னரே தெரிவு செய்தும் வைத்திருந்துள்ளார்கள். 1,500 ராணுவம் சென்றும் என்ன பயன் ? அவர்கள் போட்ட திட்டமே இறுதியில் வென்றுள்ளது. இதனை தான் சொல்வார்கள் பெரிய யானை சின்ன ஏரியில் மாட்டினால் சிறிய முதலை கூட அதனை இழுத்துச் சென்றுவிடும் என்று. இறுதியில் 22 இந்திய ராணுவம் இறந்துள்ளது. ஆனால் நாங்கள் திருப்பி அடிப்போம் என்று அமித் ஷா தெரிவித்து இருப்பது வேடிக்கையான கருத்து. ஏதோ ஒரு நாட்டு ராணுவத்தை பார்த்து கூறுவது போல அவர் கூறியுள்ளார். மாவோ­யிஸ்­டுகள் இந்தியாவில் தான் மறைந்து இருக்கிறார்கள் என்பது கூட அவருக்கு சரியாக புரியவில்லை போல.