மாஸ் நடிகை கிம் கர்தாசியன் வாங்கிய கார்: இதில் இவ்வளவு அம்சங்கள் இருக்கா ? கேட்டால் மிரண்டு போவீர்கள் !

உலக அளவில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் கொண்டிருப்பவர் பிரபல நடிகை கிம் கர்தாசியன். அமெரிக்காவில் வசித்து வரும் இவர் தற்போது புதிய கார் ஒன்றை பிாட்டின் மோட்டார்ஸ்போர்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடில்லாக் எஸ்கலேட் பிளாட்டினம் இஎஸ்வி காரையே கிம் கர்தாசியன் கஸ்டமைஸ் செய்து வாங்கியிருக்கின்றார். இது அதிக பாதுகாப்பு நிறைந்த சொகுசு வசதிகள் நிறைந்த காராகும். இக்காரையே தன்னைவிட கூடுதல் கவர்ச்சி மிகுந்த வாகனமாக கஸ்டமைஸ் செய்து தற்போது வாங்கியிருக்கின்றார்.

இதுகுறித்த தகவலை அவரே அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளம் வாயிலாக வெளியிட்டிருக்கின்றார். கடில்லாக் எஸ்கலேட் பிளாட்டினம் இஎஸ்வி காரை அலங்கரிக்கும் முயற்சியாக புதிய கேகே சில்வர் நிறத்தை நிறுவனம் வழங்கியிருக்கின்றது. கிம் விருப்பத்தின் பேரில் இந்நிறத்தை நிறுவனம் காரின் உடல் பகுதி முழுவதிலும் பூசியிருக்கின்றது. இதுதவிர, புதிய தோற்றம் மற்றும் ஸ்டைலிலான 26 இன்ச் அலாய் வீல், கூடுதல் கவர்ச்சியான உடல் பேனல்கள் என காரின் கவர்ச்சியை மெருகேற்றும் வகையில் பல்வேறு சிறப்பு அணிகலன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, மோனோ கடில்லாக் எம்பளம் அடங்கிய மெஷ் வடிவிலான கிரில் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

தொடர்ந்து டிண்ட்டட் கிளாஸ், அதிக ஸ்பாஞ்சு வசதிக் கொண்ட இருக்கை மற்றும் நீண்ட தூர பயணத்தைகூட மிகவும் அலாதியாக மாற்றக் கூடிய பிற சொகுசு அம்சங்கள் என பல அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த காரையே தான் வாங்கியிருப்பதாக தனது ரசிகர்களுக்குவெளிக்காட்டுவதற்காக கார்குறித்த புகைப்படங்களை கிம் வெளியிட்டுள்ளார். இதற்காக வெட்டிங் ஃபோட்டோ ஆல்பத்தையே மிஞ்சும் வகையில் ஃபோட்டோ ஷூட் வைத்து காரை புகைப்படம் எடுத்திருக்கின்றார் கிம். இந்த புகைப்படங்களையே தற்போது இணையத்தில் வைரலாக்கியிருக்கின்றார் கிம்.

கிம் கர்தாசினியிடம் ஏற்கனவே பல லக்சூரி கார்கள் இருக்கின்றன. இருப்பினும், கூடுதலாக ஓர் காரை அவரின் கராஜில் சேர்க்க வேண்டும் என்பதற்காக அதிக சொகுசு வசதிகள் சேர்க்கப்பட்ட கடில்லாக் எல்கலேட் எஸ்யூவி காரை அவர் வா்கியிருக்கின்றார்.