துபாய் பால்கனியில் ஆடையின்றி கும்பலாக நின்ற பெண்களுக்கு 6 மாத சிறை £ 1.000 பவுண்டு அபராதம் !

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பொது இடங்களில் முத்தமிடுவது அல்லது உரிமம் இல்லாமல் மது அருந்துவது, அநாகரீக உடை அணிவது போன்றவற்றிற்கு தடை உள்ளதோடு அவை பெரும் குற்றச் செயலாக கருதப்படுகிறது. இதுபோன்ற கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், துபாயின் மெரினா பகுதியில் பால்கனியில் 40 பெண்கள் கும்பலாக நின்று நிர்வாண போஸ் கொடுத்து உள்ளனர். சும்மா விடுவார்களா பொலிசார் ?

உடனே கைது செய்து அனைவரையும் சிறையில் அடைத்துள்ளார்கள். எவர் இந்த ஐடியாவை கொடுத்து இந்தப் பெண்களை சிக்க வைத்தாரோ தெரியவில்லை. இந்த 40 பெண்களும் லித்வேனியா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும். இந்த பெண்கள் விளம்பரத்திற்காக பால்கனியில் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும். இவர்களுக்கு தலா 6 மாத சிறை மற்றும் 1,000 பவுண்டுகள் அபராதம் என்று அரசு அறிவித்துள்ளது.