தமிழச்சி கடையில் கொளையிட முனைந்த 2வது நபரையும் பிடித்த பொலிசார்- சிறுவன் என்பது அதிர்ச்சி !

பிரித்தானியாவின் ஹல் மாநகரில் உள்ள தமிழர் கடை ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், துப்பாக்கியோடு உள் நுளைந்த நபர் கொள்ளையிட முனைந்தார். இந்த கொள்ளை சம்பவத்தில் 2 பேர் ஈடுபட்டதாகவும். ஒருவர் தப்பியோடிய நிலையில். மற்றைய கள்வர் மாட்டிக் கொண்டர். இன் நிலையில் 2வது நபரையும் பொலிசார் கைது செய்துள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. அன் நபர் வெறும் 14 வயதுச் சிறுவன் என்று கூறப்படுகிறது.

இவர்கள் தோற்றத்தில் மிகவும் உயரமானவர்கள் என்றும், தலையை மறைக்க தலைக்கவச உடையை போட்டு உள்ளே நுளைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. கைதாகிய 2 நபர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பொலிசார் அவர்களை இருவரையும் பெயிலில் விடுவித்துள்ளார்கள் என்றும் மேலும் அறியப்படுகிரது.