ஆஸ்ரா செனிக்கா போடுவதை நிறுத்த இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்கிறது பிரிட்டன் கவுன்சில் !

30 வயதுக்கும் குறைவான நபர்களுக்கு ஆஸ்ரா செனிக்கா தடுப்பூசி போடுவதை நிறுத்துவதா இல்லையா என்ற முடிவு இன்று(06) எட்டப்பட உள்ளது. பிரித்தானிய மருத்துவக் கவுன்சில் இது தொடர்பாக இன்று மருத்துவ விஞ்ஞானிகளோடு ஆலோசனை ஒன்றை நடத்தி. மேற்கொண்டு இதனை 30 வயதுக்கு குறைவான நபர்களுக்கு போடுவதா ? இல்லையா என்ற முடிவை எட்ட உள்ளது. NHS : Regulator will consider TODAY whether to stop using AstraZeneca jab in the under 30s amid fears of fatal blood clots as Britain’s ‘Professor Lockdown’ says use of vaccine in the young is ‘complicated’.

ஆஸ்ரா செனிக்கா தடுப்பூசி ஏற்றிய 30 வயதுக்கும் குறைவான 25 பேருக்கு ரத்தக் கட்டிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மூளையில் அது சென்று நாளங்களை அடைத்து சிலர் ஆபத்தான நிலையில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இதில் ஏற்கனவே 20 பேர் இறந்து விட்டார்கள். இந்த தகவலும் பின்னரே வெளியிடப்பட்டுள்ளது என்பதும் அதிர்ச்சி தான்.