சைலன்டா சைக்கிளில் சென்று வாக்களித்த நடிகர் விஜய்- நடந்தே சென்று வாக்கு போட்ட அஜித் என்ன தான் நடக்கிறது ?

தமிழக தேர்தல் என்பது தமக்கு முக்கியமான விடையம் என்று, மெகா நடிகர்கள் சிலர் காண்பித்து உள்ளார்கள். அந்த வகையில் அதிகாலையில் எழுந்து நடிகர் விஜய் சைக்கிளில் சென்று தனது வாக்கை போட்டு விட்டு ஓசைபடாமல் வீடு திரும்பியுள்ள நிலையில். நடிகர் அஜித் மற்றும் நடிகர் விக்கிரம் ஆகியோர் நடந்து சென்று வாக்கு போட்டு வீடு திரும்பி உள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. அது போல எந்த ஒரு ஆடம்பரமும் இன்றி நடிகர் விஜய் சேதுபதியும் தனது வாக்கை போட்டு வீடு திரும்பியுள்ளார்.

கொரோனா கால கட்டம் என்பதனால் ஆடம்பர காரில் சென்று இறங்கினால் ரசிகர்கள் வந்து விடுவார்கள். அவர்களிடம் இருந்து கூடவே கொரோனாவும் வந்துவிடும். அதனால் ஓசை படாமல் முக கவசத்தை போட்டு மூடிக் கட்டிக் கொண்டு சென்று வாக்கை போட்டு திரும்பி விட்டார்கள் பிரபலங்கள். மூகக் கவசம் கொரோனாவுக்கு உதவுகிறதோ இல்லையோ, ஆனால் பிரபலங்களுக்கு நன்றாக உதவுகிறது.

Contact Us