22 இந்திய ராணுவத்தை கொன்றது போதாது என்று ஒருவரை பிணைக் கைதியாக வைத்திருக்கும் மாவோயிஸ்டுகள்

மாவோயிஸ்டுகள் முகாம் ஒன்று இருப்பதாக தாமே செய்தியை கொடுத்து, ராணுவத்தை ஒரு பகுதிக்கு வரவளைத்து. பின்னர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திக் கொன்றுள்ளார்கள். இதில் 22 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று பார்த்தால். ராகேஷ்வர் சிங் என்ற ராணுவ சிப்பாயைக் காணவில்லை என்று தேடி வந்தது ராணுவம். இன் நிலையில் ராகேஷ்வர் சிங் எம்மிடம் பணயக் கைதியாக உள்ளார். அவரை சித்திரவதை செய்யாமல் விடுவிக்க உள்ளோம் என்று தகவல் சொல்லி விட்டுள்ளார்கள் மாவோயிஸ்டுகள். அதிலும் இந்த தாக்குதலுக்கு என்ன காரணம் என்று கேட்டால் தலை சுற்றும் ஏன் தெரியுமா …

சில தினங்களுக்கு முன்னர் தான், மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் உள்ள 2 கிராமங்களுக்கு பெரும் எடுப்பில் சென்ற இந்திய ராணுவம் அங்கே கொடி கம்பங்களில் இந்திய தேசிய கொடியை பறக்கவிட்டுச் சென்றுள்ளதாம். இதற்கு பதில் அடி கொடுக்க தான் இவ்வாறு அவர்கள் செய்துள்ளார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

தமது காயப்பட்ட வீரர்களை அழைத்துக் கொண்டு ரக் ரக வண்டியில் அந்தக் காட்டுப் பகுதில் இருந்து தப்பிச் சென்றுவிட்டனர் மாவோயிஸ்டுகள். அந்த ரக் வண்டியைக் கூட ஏன் மறிக்கவில்லை ? சுமார் 2,000 ராணுவம் அங்கே இருந்தும் ஏன் அந்த ரக் வண்டி மீது தாக்குதல் நடத்தவில்லை என்ற கேள்விகள் தற்போது எழுகிறது. இதில் அவர்களிடம் பணயக் கைதி வேறு. இந்திய ராணுவத்தின் திறன் என்ன ? அவர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்பது பெரும் கேள்விக் குறிதான்.