தமிழர்களே ஜாக்கிரதை- பிரிட்டனில் இன்சூரன்ஸ் இல்லாமல் கார் ஓடும் நபர்கள் 33% அதிகரிப்பு- இடித்தால் கவர் பண்ணுமா ?

 

பிரித்தானியாவில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு, இன்சூரன்ஸ் இல்லாமல் கார் ஓட்டும் நபர்களின் எண்ணிக்கை சுமார் 33% சத விகிதத்தால் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வருடங்களான பொலிசார் முன்னர் போல கார்களை மறித்து, அவர்களுக்கு இன்சூரன்ஸ் உண்டா என்று சோதிப்பது இல்லை. இது வெகுவாக குறைவடைந்துள்ளது. இன் நிலையில் நேற்று முன் தினம் பிறந்து 2 வாரமே ஆண சிசுவை அம்மா பிராமில் வைத்து தள்ளிக்கொண்டு சென்றவேளை…

படு வேகமாக வந்த BMW அதுவும் புதுக் கார் ஒன்று முட்டி மோதியுள்ளது. இதில் அம்மா படு காயமடைந்தார்.  2 வாரக் குழந்தை ஸ்தலத்திலேயே இறந்து. ஆனால் அந்த வெள்ளை நிற BMW கார் நிற்காமலே சென்று. பிறிதொருட் இடத்தில் காரை நிறுத்தி விட்டு, ஓட்டியவர் இறங்கி ஓடி தலைமறைவாகிவிட்டார்.  இதனை அடுத்து பொலிசார் பெரும் தேடுதல் நடவடிக்கையில் இறங்கி. இறுதியாக காரின் நம்பர் பிளேட்டை எடுத்து குறித்த நபரைக் கைது செய்தவேளை. அவருக்கு இன்சூரன்ஸ் கூட கிடையாது என்பதனை கண்டு பிடித்துள்ளார்கள். இதனை அடுத்தே கடந்த மாதம் வெளியான ஒரு அறிக்கை சூடு பிடித்துள்ளது.

அதாவது பணக் கஷ்டம் காரணமாக பலர் தமது கார் இன்சூரன்ஸை கட்டுவது இல்லை. சிலருக்கு அது நின்று போனதே தெரிவதும் இல்லை. இப்படியான இன்சூரன்ஸ் இல்லாத கார் ஒன்று உங்கள் காரை தாக்கினால். உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனி உங்களுக்கு நஷ்ட ஈடு தருமா என்று அறிந்து வைத்திருப்பது நல்லது. ஏன் எனில் தற்போது பிரிட்டனில் உள்ள பல இன்சூரன்ஸ் கம்பெனிகள் , காப்புறுதி செய்யாத கார் எமது கார் மீது மோதினால் நஷ்ட ஈடு தருவது இல்லை.

அதேவேளை நஷ்ட ஈட்டை பெறப் போனால், உங்கள் இன்சூரன்ஸில் இருந்து தான் தருவார்கள். அப்படி என்றால் நீங்கள் இதுவரை காலமும் வைத்திருந்த நோ- கிளேம்- போனஸ் போய் விடும். எனவே உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனிகள் என்ன செய்வார்கள் எதனை செய்ய மாட்டார்கள் என்பதனை அறிந்து வைத்திருப்பது நல்லது. இல்லையேன்றால் வேறு நல்ல கம்பெனிக்கு மாறிவிடுவது நல்லது.