அவரை காதலிச்சு நான் நாசமா போனது போதும்.. காதல் தோல்வி குறித்து மனம்திறந்த அஞ்சலி

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அஞ்சலி தன்னுடைய காதல் தோல்வி குறித்து முதல்முறையாக காதலால் ஏற்பட்ட அவஸ்தையும் கூறியுள்ளார். ஆரம்பத்தில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த அஞ்சலி ஒருகட்டத்தில் கமர்ஷியல் நாயகியாக வலம் வர ஆசைப்பட்டு புதைகுழியில் விழுந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

கவர்ச்சியில் எல்லை மீற தெலுங்கு சினிமா அள்ளிக்கொண்டு போனது. ஒரு சமயத்தில் அஞ்சலியை கேரியர் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது தன்னுடைய குடும்பத்தினரால் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டு சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகி இருந்தார்.

அதன்பிறகு மீண்டுவந்த அஞ்சலி படங்களில் கவனம் செலுத்தினார். இதற்கிடையில் தமிழ் சினிமாவில் உள்ள இளம் நடிகர் ஒருவருடன் நீண்ட காலமாக காதலில் இருந்து வந்தார். காதலில் இருந்தார் என்பதைவிட லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர் என்று பலரும் சொல்லும் அளவுக்கு நடந்து கொண்டனர்.

ஆனால் சமீப காலமாக அந்த நடிகரின் பக்கம் அஞ்சலி தலைவைத்துப் படுப்பதில்லை. அதற்கு காரணம் அந்த நடிகர் அஞ்சலியை கழட்டி விட்டுவிட்டு வேறு ஒரு நடிகையுடன் டாவடித்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்திதான் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அஞ்சலி காதல் என்ற பெயரில் ஏமாந்துவிட்டேன் எனவும், அதனால் தன் வாழ்க்கையில் பல சந்தோஷங்களை இழந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் இதிலிருந்து மீண்டு வந்து தற்போது சினிமாவில் கவனம் செலுத்துவதற்கு தனது அம்மாதான் காரணம் எனவும் அஞ்சலி கூறியுள்ளது ரசிகர்களிடம் யார் அந்த நடிகர்? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.