திடீரென்று ரெலோவைச் சந்தித்த பிரித்தானிய தூதுவர் அங்கே என்ன நடந்தது ?

கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹமில்டன் அவர்களுடன் உத்தியோக பூர்வமான சந்திப்பினை இன்று மேற்கொண்டனர்.மிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்படும் இச்சந்திப்பில் ரெலோ தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கருணாகரம் மற்றும் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐ.நா விடயங்கள், அரசியல் தீர்வு, மாகாணசபை தேர்தல்கள், நில அபகரிப்பு, இளையோர் மற்றும் பெண்கள் பங்களிப்பு, அபிவிருத்தி ஆகிய பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக நடந்த பேச்சுக்கள் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது.