அக்காவின் அளவுகடந்த பாசத்தால் உயிர்பெற்ற தம்பி… நெகிழ்ச்சியான உண்மை சம்பவம் !

இங்கிலாந்து நாட்டில் lewisroberts(18) மற்றும் jaderobert (அக்கா) என்பவர்கள் தன் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர் கடந்த 18ஆம் தேதி அன்று சாலையில் நடந்து சென்று உள்ளார். அப்போது வேன் ஒன்று எதிர்பாராத வேளையில் இவர் மீது மோதியதால் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார். அதைப் பார்த்த போலீசார் உடனடியாக அவரை ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளை பாதிப்பு நோய் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தார்கள். மேலும் இந்த நோய் பாதித்தவர்களால் மூச்சுவிட முடியாது, கைகால் அசைக்க முடியாது, கண்ணிமைக்க முடியாது, படுத்த வாக்கில் தான் இருக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சுருக்கமாக சொல்லப் போனால், சாவடைந்து விட்டார் என்பதே கருத்து. சில நாட்களில் உயிர் காக்கும் இயந்திரத்தை நிறுத்தி விடுவார்கள்.

மருத்துவர்கள் அவருடைய குடும்பத்தினரிடம் உங்கள் மகன் பிழைக்க மாட்டான் என்று கூறி உள்ளனர். இதனால் மனமுடைந்து போன அவருடைய அக்கா மற்றும் தாய், தந்தை ஆகியோர் மிகுந்த வேதனையோடு கண்ணீர்விட்டு கதறி கொண்டிருந்தனர். அவரது பெற்றோர் தன் மகனின் உடல் உறுப்புகளை 7 பேருக்கு தானம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்கள். இதற்கான அறுவை சிகிச்சை நாளும் வந்து விட்டது. இறுதியான தம்பியை பார்க்க அக்கா அங்கே சென்றுள்ளார். அவர் தம்பி உடல் அருகே உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

கடைசியாக நான் ஒன்று, இரண்டு , மூன்று சொல்லுவேன், நீ மூச்சை எடுத்து விட வேண்டும். செய்வாயா என்று கேட்டுள்ளார். கோமா நிலையில் தம்பி இருந்ததால். அவர் ஏதோ ஒரு காது கேட்க்காத நபரிடம் போசுவது போலவே பேசிக் கொண்டு இருந்துள்ளார். இன் நிலையில் அறுவை சிகிச்சை செய்து உடல் பாகங்களை எடுக்க, அவர் உடலை கொண்டு செல்ல தாதிகள் அங்கே வந்துள்ளார்கள். அக்காவை வெளியே செல்லுமாறும் அவர்கள் கூறியுள்ளார். இறுதியா சொல்கிறேன் மூச்சை எடுத்து விடு. நான் 1,2, 3 சொவேன் என்று சொல்லிய அக்கா. அதனை கூறிய சில நொடிகளில், தம்பி மூச்சை எடுக்க ஆரம்பித்துவிட்டார்,

அது போக அவர் கண்களிலும் சிறிய அசைவு தென்பட்டதை அடுத்து. தாதியர்கள் மருத்துவரை உடனடியாக அழைத்துள்ளார்கள். தம்பியை பார்த்த மருத்துவர்கள் இது பெரும் அதிசயம் என்றும். இந்த நிலையில் இருந்து உலகில் மீண்ட ஆட்களில் இவர் 2வது நபர் என்றும் கூறியுள்ளார்கள். கோம நிலையில் இருந்தாலும், பொதுவாக நாம் பேசுவது அவர்கள் காதுகளில் விழும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். அக்காவின் பாசம் தம்பி உயிரை பாதுகாத்துள்ளது.