சிறுமியை வன்கொடுமை செய்த காமுகனுக்கு இலங்கையில் பொலிஸ் செய்த உதவி!

சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேக நபருக்கு உடந்தையாகச் செயற்பட்ட சக பொலிஸ் உத்தியோகத்தர்களை தம்புள்ளைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

போஹோரன்வேவா பகுதியிலுள்ள வீதி வழியாக குறித்த பத்து வயதான சிறுமி தினமும் பிரத்தியோக வகுப்புகளுக்கு சென்று வந்த நிலையில், நபர் ஒருவர் திட்டமிட்டு கடத்தி பாலியல் வன்கொடுமை புரிந்துள்ளார்.

குறித்த காமக் கொடூரனுக்கு தம்புள்ளை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, உதவிப் பரிசோதகர் மற்றும் 60533 இலக்கமுடைய பொலிஸ் சார்ஜென்ட் ராஜபக்ஷ, காண்ஸ்டபிள் அதிகாரி 77199 டி.எம்.எஸ் சதுரங்கா ஆகியோரை நேற்று தம்புள்ளை பொலிஸார் கைது செய்தனர்.

இதன்போது நடந்த விசாரணையில் பொலிஸ் சார்ஜென்ட் ராஜபக்ச தனது முச்சக்கர வண்டியை குறித்த காமக்கொடூரனுக்கு வழங்கியமை தெரியவந்தது.

இதனையடுத்தே அவர்களு அனைவரும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர்