யாழில் மீண்டும் விடுதலைப்புலிகளின் காவல்துறை; பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது ?

முதன் முறையாக யாழில் காவலர் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல், மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காகவே புதிய மாநகர பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநகர பாதுகாப்பு படை, நாளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை பரீட்சார்த்தமாக நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்ட நிலையில் விபத்துக்களை தவிர்க்க முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணித்தது. மேலும், அந்த காவலர் படை பரீட்சார்த்தமாக இன்று தமது கடமைகளை ஆரம்பித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Contact Us