20 நாள் வெயிட் பண்ணி பார்த்தாச்சு, எதுவுமே நடந்த மாதிரி தெரியல…’ ‘இதுக்கு மேல பொறுக்க முடியாது…’ – பெண் வேட்பாளர் செய்த காரியம்…!

வாட்ஸ்-அப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய நபரை கண்டுபிடிக்காததால் பல்லாவரத்தில் பெண் வேட்பாளர் செய்த செயல் அனைவரையும் கதிகலங்க வைத்தது.

பல்லாவரம் தொகுதியில் ‘மை இந்தியா பார்ட்டி’ வேட்பாளராக கி.வீரலட்சுமி என்பவர் போட்டியிடுகிறார். தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பின் நிறுவனரான கி.வீரலட்சுமியின் வாட்ஸ்-அப் நம்பருக்கு மர்ம நபர் ஒருவர் ஆபாச வீடியோ அனுப்பியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வீரலட்சுமி, சங்கர் நகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்று போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே தனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபரை 3 நாட்களில் காவல்துறையினர் கைது செய்யபடவேண்டும் எனவும், அப்படி செய்யாவிட்டால் அந்த நபரை தானே கண்டுபிடித்து, நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டி வைப்பேன் என்றும், அந்த காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்றும் ஒரு வீடியோ பதிவையும் சமூக வலைதளத்தில் வீரலட்சுமி பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது புகார் அளித்து 20 நாட்களாகியும் சம்பந்தப்பட்ட நபரை போலீஸார் கைது செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வீரலட்சுமி நேற்று காலை சென்னை விமான நிலையம் அருகே உள்ள 100 அடி செல்போன் டவர் மீது ஏறி அனைவருக்கும் ஆட்டம் காட்டியுள்ளார்.

மேலும் ஆபாச வீடியோ அனுப்பியவரை கைது செய்யும்வரை கீழே இறங்க மாட்டேன் என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரும் கட்சி நிர்வாகிகளும் அவரை மர்ம நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்தனர்.

அதன்பின்னரே வீரலட்சுமி தர்ணாவை கைவிட்டு, செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். வாக்குப்பதிவு நாளில் பெண் வேட்பாளர் செல்போன் டவர் மீது ஏறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us