கவர்ச்சியில் உச்சத்தை தொட்ட அதுல்யா.. முதலிரவை வைத்து உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் பட டிரைலர்

குடும்ப குத்து விளக்காக இருந்த அதுல்யா சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களில் கிளாமரை அள்ளி வீசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கேப்மாரி படத்தில் உச்சத்தைத் தொட்டிருந்தார். கவர்ச்சி நாயகியாக முடிவெடுத்த பின்னர் இனி எதையும் மறைத்து பிரயோஜனமில்லை என ஒரு நகைச்சுவை படத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு மொத்தத்தையும் காட்டி நடித்துள்ளார் அதுல்யா ரவி.

ஹீரோவாக எப்படியாவது ஒரு வெற்றி கொடுத்துவிட வேண்டும் என்று பல காலமாக போராடிக் கொண்டிருப்பவர் சாந்தனு. இத்தனைக்கும் இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர் என பெயரெடுத்த பாக்கியராஜின் மகன். ஆனால் அவரால்கூட அவரது மகனுக்கு ஒரு வெற்றிப்படம் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் பாக்கியராஜின் பழைய முருங்கைக்காய் மேட்டரை மையமாக வைத்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற பெயரில் சாந்தனு ஒரு படம் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. காமெடியை விட கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. அதுவும் அதுல்யா சேலையை உருவி சுத்த விடுவதெல்லாம் வேற லெவல்.