அஜித் ரசிகரின் ஃபோனை பிடுங்கியதற்கு கருத்து சொன்ன டிடி(DD).. மூடிட்டு போ என்ற ரசிகரின் பதிவு செம வைரல்

தல அஜித் ஓட்டு போட சென்றபோது ரசிகரின் செல்போனை கோபத்துடன் பிடுங்கிச் சென்ற வீடியோ இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி ஆரம்பித்தன. இதனால் தல ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். எப்போதுமே அதிகாலையில் வந்து முதல் ஆளாக ஓட்டு போடுபவர் அஜித். அந்த வகையில் இந்த முறையும் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் ஓட்டு போட வந்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் அவர்களை முற்றுகையிட்டனர்.

இதன் காரணமாகத் தல அஜித் ஓட்டுப் போட செல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். என்னதான் போலீஸ் பாதுகாப்பு போட்டாலும் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதால் அந்த இடத்திலிருந்து எப்படியாவது சென்று விட வேண்டும் என முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.

அப்போது தல அஜித்தின் ரசிகர் ஒருவர் செல்பி எடுப்பதற்காக வந்ததைப் பார்த்து கடுப்பான தல உடனடியாக அந்த ரசிகரின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதன்பிறகு செல்போனை திருப்பிக் கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்டு சென்றார்.

தல அஜித் ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் யூஸ் பண்ண கூடாது என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் பின்னர் மாஸ்க் போட சொல்லி வலியுறுத்தி போனை திருப்பிக் கொடுத்த வீடியோக்கள் வைரலானது.

இதனை விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்ஷினி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அஜித்தின் கஷ்டங்களை பற்றித்தான் கூறியிருந்தார். அதாவது அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு எப்போதுமே சந்தோஷத்தை தான் கொடுப்பார் எனவும், அவரை ஓட்டு போட நிம்மதியாக விடுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித் சாரின் பொறுமை வியக்க வைக்கிறது எனவும் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த தல ரசிகர் ஒருவர் எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென தல அஜித்துக்கு தெரியும் மேடம், நீங்கள் மூடிட்டு போங்கள் வாயை எனவும் திட்டியுள்ளார்.

 

Contact Us