புலிகளை ஒத்த இந்த சீருடை பாவிக்க முடியாது- சீருடையை ஒப்படைக்க பொலிஸ் கோரிக்கை !

யாழ்.மாநகரசபையினால் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல், மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட காவல் படையின் சீரூடை விவகாரம், எதிர்பார்த்தபடி சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக தெரியவருகிறது.

குறித்த சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைப் பகுதிகளுக்குள் காவல்துறையினர் பயன்படுத்திய சீருடையைப் போன்ற வர்ணத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சீருடைகளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸார் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்திருப்பதாக அதிர்வு இணையம் அறிகிறது. கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற பணிப்பிற்கு அமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டுவருவதாகவும் சொல்லப்படுகிறது.

உயரிய நோக்கம் கொண்ட உன்னத போராளிகள் அணிந்திருந்த இந்த சீருடையை, வேறு யாரும் போட தகுதி இல்லை என்று பல தமிழர்கள் விசனம் தெரிவித்து இருந்தார்கள். இன் நிலையில் புலிகள் சீருடையை ஒத்ததாக இந்த சீருடை உள்ளது என்று பல இணையங்கள் தகவல் வெளியிட்ட நிலையில். குறித்த சீருடையை மாற்றுமாறு சிங்களம் கூறியுள்ளது. இதுவும் ஒருவகையில் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி தான்.