என் நண்பனுக்கு என்ன ஆச்சு’… ’40 வருட நட்பு, அடுத்த 10 நிமிடத்தில் நடந்த சோகம்’… சோகத்தில் ஆழ்ந்த மொத்த கிராமம்!

இறப்பிலும் இணைபிரியாமல் இந்து முஸ்லீம் நண்பர்கள் இறந்தது பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

Ariyalur: Hindu-Muslim friends who are inseparable even in death

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில் அல்லா கோவில் அருகே வசித்து வருபவர் மகாலிங்கம். இவர் தெருவின் அருகே உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர் சிறிய தேநீர்க்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் எதிர் புறம் வசித்து வருபவர் ஜெயிலா புதின். இவர் தெருவில் ஒரு ரைஸ்மில் நடத்தி வருகிறார்.

Ariyalur: Hindu-Muslim friends who are inseparable even in death

இவர்கள் இருவரும் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். மகாலிங்கம் வீட்டில் சுப காரியங்கள் நடந்தாலும் பண்டிகை காலங்களாக இருந்தாலும் ஜெயிலா புதின் கலந்து கொள்வார். அதேபோல் ஜெய்லா புதின் வீட்டில் சுபகாரியங்கள் பண்டிகை காலங்களிலும் மகாலிங்கம் கலந்து கொண்டு உணவு பதார்த்தங்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.

Ariyalur: Hindu-Muslim friends who are inseparable even in death

இதுகுறித்து இருவரின் மகன்களும் கூறுகையில் “எங்களின் தாத்தா முதல் தலைமுறை. தந்தை இரண்டாம் தலைமுறை. இதைத் தொடர்ந்து நாங்களும் மூன்றாவது தலைமுறையாக இதேபோல் ஒற்றுமையாக உள்ளோம்.  உற்றார் உறவினர்போல் சுப துக்க காரியங்களில் ஒன்றிணைந்து மதங்களைக் கடந்து நாங்கள் நட்புடன் தொடர்வோம். எங்களின் தாத்தா தந்தை ஆகியோரின் ஆசையும் அது தான்” எனத் தெரிவித்தனர்.