பயிற்சி’க்கு நடுவே.. விழுந்து விழுந்து சிரித்த ‘UNIVERSAL’ பாஸ்.. அப்படி யாருய்யா ‘காமெடி’ பண்ணது??.. வீடியோ இப்போ செம ‘வைரல்’!!

ஐபிஎல் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்து அணிகளைச் சேர்ந்த வீரர்களும், தங்களது அணியினருடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

sarfaraz khan makes chris gayle laguhter in punjab nets

பஞ்சாப் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, கெயில் உள்ளிட்ட சில வீரர்கள் அங்கு உட்கார்ந்திருந்திருக்க, அந்த அணியில் இடம்பெற்றுள்ள இந்திய இளம் வீரர் சர்பராஸ் கான், வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் டேரன் சேமியைப் போல, செய்து காட்டினார். இதனைக் கண்ட கெயில், சத்தம் போட்டு சிரித்துக் கொண்டே, ‘ஆமாம், இது டேரன் சேமி தான்’ என கூறினார்.

 

சர்பராஸ் கான் பெங்களூர் அணிக்காக ஆடிய போது, டேரன் சேமியுடன் இணைந்து ஆடியுள்ளார். அதே போல, பஞ்சாப் அணிக்காகவும் இருவரும் இணைந்து ஆடியுள்ளனர்.

sarfaraz khan makes chris gayle laguhter in punjab netsஅதனை வைத்தே, சேமி செய்வதை பின்பற்றி சர்ப்ராஸ் செய்து காட்டி, கெயிலையும் சிரிக்க வைத்த வீடியோ, தற்போது அதிக வரவேற்பை பெற்று வருகிறது.