புரோமோஷன் என்ற பெயரில் பணம் வாங்கி ஏமாற்றும் விஜய் டிவி பிரபலங்கள்.. அதுலயும் இந்தப் பொண்ணு

விஜய் டிவி பிரபலங்கள் வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் தான் விஜய் டிவியில் சீரியல் பிரபலங்களாக நடித்துக் கொண்டிருக்கும் பல நடிகைகளும் பிரமோஷன் என்ற பெயரில் ஏமாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

விஜய் டிவியில் சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி தான். இதில் கலந்து கொண்டவர் தர்ஷா குப்தா. இவர் சமீபத்தில் ஒரு நிறுவனத்திடம் புரோமோஷன் பண்ணித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியதாக ஒருவர் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இதை பார்த்த தர்ஷா குப்தா அதிர்ச்சியடைந்து, நான் அப்படி செய்யவில்லை என அழுது புலம்பி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதாவது விஜய் டிவி பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் உள்ள பாலோயர்களை பொருத்து ஒரு பொருளை பிரமோட் செய்வதற்காக ஒரு வீடியோவுக்கு, ஒரு போட்டோவுக்கு இவ்வளவு என பேசி சம்பாதித்து வருகின்றனர்.

இவர் கூட பரவாயில்லை, ஆனால் ராஜா ராணி சீரியல் என்ற ஒரே ஒரு சீரியல் மூலம் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு வரவேற்பைப் பெற்ற ஆலியா மானசா மோசடி செய்வதில் முதல் ஆளாக இருக்கிறாராம். சின்ன சின்ன யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தாலும் சரி, சின்ன சின்ன நிறுவனங்களின் பொருள்களை பிரமோஷன் செய்வதானாலும் சரி, லட்சக் கணக்கில் பில்லு போட்டு வருகிறாராம்.

ஒரு வீடியோவுக்கு ஒரு லட்சம் வரை புரமோஷன் பண்ணுவதற்காக பணம் வாங்குகிறாராம் ஆலியா மானசா. அப்படி ஒரு நிறுவனத்திடமிருந்து பணம் வாங்கி அபேஸ் பண்ணி விட்டதாக சமீபத்தில் ஒருவர் வீடியோ வெளியிட்டு தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.

சினிமா பிரபலங்களை தேடிச்சென்று விளம்பரம் தேட முயற்சிக்கும் நிறுவனங்கள் பலவும் இப்படி சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது. சீரியல்களை ஒழிப்பதை போல சீரியல் நடிகைகளின் ஒழித்துவிட வேண்டும் போல. இவர்கள் செய்யும் விளம்பரங்களை நம்பி பொருட்களை வாங்கி ஏமாறுபவர்கள் பலர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.