லண்டனில் மியான் மார் ராணுவத்தின் அட்டகாசம் – தனது தூதரையும் விட்டுவைக்க வில்லை என்பது அதிர்ச்சி !

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது யாவரும் அறிந்ததே. ஆனால் அந்த வெற்றி செல்லுபடியாகாது என்று கூறி, அன் நாட்டு ராணுவம் ஆட்சியைக் கலைத்து. ஆட்சியை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவத்தது. இதனை அடுத்து பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில். லண்டனில் உள்ள மியான் மார் தூதுவரலாயத்தில் பணியாற்றும் தூதுவர்…

ஆன் சான் சுகிக்கு ஆதரவாக பேசியதோடு. அவரை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து லண்டனில் உள்ள தனது தூதுவரையே உடனே வெளியே செல்லுமாறு அங்குள்ள ராணுவ அதிகாரிகள் பணித்ததோடு. தூததரகத்தை இழுத்து மூடியுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. ஒரே நாளில் தூதுவர் பதவியை இழந்து , இருக்கும் லண்டன் வீட்டையும் இழந்து தூதுவர் நடு தெருவுக்கு வந்துள்ளார். இதனால் பிரித்தானிய அரசு அதிர்சியடைந்துள்ளதோடு கடும் அதிருப்த்தியை தெரிவித்துள்ளது.

தற்போது பிரித்தானிய அரசு தான் மியான் மார் தூதுவருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏன் எனில் அவர் நாடு திரும்பினால் அவரைக் கைது செய்ய ராணுவம் காத்து இருக்கிறது. இதனை அடுத்து லண்டனில் உள்ள மியான் மார் தூதுவராலயத்தை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.