ஆரம்பிக்கலாங்களா?’ என ட்வீட் போட்டு, கமலின் விகரம் பற்றிய அதிரடி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

சமீப காலங்களில் அதிகமாக டிரெண்டிங்கில் இருக்கும் இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவராவார். குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்து அசால்டாக அசுர வெற்றிகளை கொடுத்து விட்டார் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சமீபத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ படம் ரசிகர்களுக்கு இடையில் அபார வரவேற்பைப் பெற்றது. லோகேஷ் கனகராஜின் இயக்கம் இதில் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. மாஸ்டர் படத்தை அடுத்து, உலக நாயகன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்திற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

ரசிகர்களிடையே அதிக அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள விக்ரம் படத்தின் கதை, திரைக்கதையின் இறுதிகட்ட வேலைகளில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) மும்முரமாக உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட விக்ரம் படத்தின் டைடில் டீசர் மிகவும் வித்தியாசமாகவும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருந்தது. இந்த டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது.