ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிந்த பிரிட்டன் – வாகனங்களுக்கு தீ வைத்த எதிர்ப்பாளர்கள்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் முழுவதுமாக வெளியேறிய நிலையில், அந்நாட்டு வர்த்தக கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. தெற்கு அயர்லாந்துடன் மேற்கொள்ளப்படும் வர்த்தகத்துக்கு, பிரிட்டன் புதிதாக கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்கு அயர்லாந்துவாசிகள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தும், வெடிப் பொருட்களை வெடித்தும், எதிர்ப்பாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

புதிய வர்த்தக கொள்கைகளுக்கு எதிர்ப்பு – தெற்கு அயர்லாந்தில் நீடிக்கும் கலவரம்

பிரிட்டனின் புதிய வர்த்தக கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெற்கு அயர்லாந்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. சில இடங்களில் போராட்டக்காரர்கள், வாகனங்களுக்கு தீ வைத்தும், பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கியும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தெற்கு அயர்லாந்தில் அரங்கேறும் காட்சிகள், கவலை அளிப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர், பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், வன்முறை வாயிலாக தீர்க்க முடியாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.