முழு அளவில் படைகளை நகர்த்தும் ரஷ்யா- யூக்கிரேன் போடரில் தான் 3ம் உலக போர் ஆரம்பமா ?

கொரோனா தொற்றுநோய் நெருக்கடி இன்னும் தீராத நிலையில், இப்போது உலகப் போர் மூழும் அச்சுறுத்தல் உள்ளதாக வரும் செய்திகள் திகிலை கிளப்புகின்றன. ரஷ்யா-உக்ரைன் எல்லையில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக உலகப் போர் மூழும் சாத்தியக்கூறுகள் தீவிரமடைந்துள்ளன. நிலைமை மேம்படவில்லை என்றால், ஒரு மாதத்திற்குள் உலகம் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் கடுமையான போரை எதிர்கொள்ளும் என்று இராணுவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ரஷ்யா சமீபத்தில் எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியில், 4,000 துருப்புக்களை அனுப்பியுள்ளது போதாது என்று. மேலும் ரயில் வண்டி ஊடாக அதிகளவான ராங்கிகளை எல்லைப் பகுதிக்கு அனுப்பி குவித்து வருகிறது. ரஷ்ய இராணுவ நிபுணர் பாவெல் ஃபெல்கென்ஹார், மேலும் கூறுகையில், போர் வெடித்தால், அது இரண்டு நாடுகளுக்கு இடையிலான போராக இல்லாமல், ஐரோப்பிய அல்லது உலக அளவிலான போராக வடிவெடுக்கும் என்கிறார்.

உக்ரைன் நாட்டின் டாம் பாஸ் என்னும் மாநிலத்தை கைப்பற்ற ரஷ்யா பெரும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ஆனால் இந்த ஆக்கிரமிப்பை ஐரோப்பிய ஒன்றியம் அனுமதிக்காது என்று கூறப்படுகிறது. எனவே எல்லையில் யூக்கிரேன் ராணுவம் மற்றும் ரஷ்ய ராணுவம் மோதல் ஆரம்பித்தால். அமெரிக்கா யூக்கிரேனுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும். அதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் மேலதிக ஏவுகணைகளை கொடுத்து உதவ உள்ளது. இதனால் இதனை ரஷ்ய யுக்கிரேன் போராக கருதவே முடியாது.