தமிழர்களை வெளியே துரத்தியடிக்கும் சூரியன், சக்தி போன்ற இனவாத ஊடகங்கள்!

தற்போது இனவாத பேச்சுக்கள், செயற்பாடுகள் சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சில மக்களிடையே உச்சம் பெற்றுள்ளதாக தமிழர் தரப்பில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.

இதன் எதிரொலியாக தென்னிலங்கையிலுள்ள தமிழர்களின் தனியார் நிறுவனங்களுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

தவிர KEELLS போன்ற நிறுவனங்களில் தமிழர்களின் சிறு கைத்தொழில் நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுகின்றது.

இதேபோல் தற்போது ஊடகங்களிலும் இந்த இனவாத செயற்பாடுகள் உச்சம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.

அந்த வைகையில் கொழும்பில் இயங்கும் இரண்டு பிரபல போட்டி நிறுவனங்களுக்கும், குறிப்பாங்க வானொலியில் அறிவிப்பாளர்களாக இருக்கும் தமிழ் உணர்வு கொண்ட தமிழ் இளைஞர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிலரை வெளியேற்றியுள்ளனர்.

கொழும்பில் தமிழர்களால் நடாத்தப்படும் ஊடகங்களை புறந்தள்ளிவிட்டு, இப்படியான இனவாதம் கொண்ட உரிமையாளர்களால் நடாத்தப்படும் ஊடகங்களுக்குத்தான் தமிழ் பேசும் தமிழ், முஸ்லீம் மக்கள் ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது என முகநூலில் சுட்டிக்காட்டப்படுகிறது.