சிவனேன்னு இருந்த அந்த மனுஷனை கடுப்பேத்தி’ … ‘ராகுல் பாயின் மறுபக்கம்’… ‘கோலி பகிர்ந்த வீடியோ’… இணையத்தைத் தெறிக்கவிடும் வீடியோ!

பொறுமையின் சிகரம் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட் குறித்த வீடியோ ஒன்றை விராட் கோலி பகிர்ந்துள்ளார்.

Rahul Dravid unleashes his angry side in CRED advertisement

பேட்டிங்கில் மட்டுமின்றி குணத்திலும் டிராவிட் மிகுந்த பொறுமைசாலி தான். டெஸ்ட் போட்டிகளில் இவரது விக்கெட்டை சாய்ப்பது எப்பேற்பட்ட பவுலருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தது. ஆஸ்திரேலிய பவுலர்களை கூட, டிராவிட் அலறவிட்டிருக்கிறார். அனுபவம், அமைதி, ஆக்கப்பூர்வம் என அனைத்து வகைகளிலும் இந்திய அணிக்கு பெரும் துணையாக ராகுல் டிராவிட் இருந்தார் என்றே கூறலாம்.

Rahul Dravid unleashes his angry side in CRED advertisement

ஒருமுறை பிட்ஸ் பிலானி பட்டமளிப்பு விழாவில் ‘காத்திருப்பு’ குறித்து ராகுல் பேசும்போது, “என் பெற்றோர்கள் சொன்னதைக்கேட்டு எனது தலைமையாசிரியர் என்னைக் கிரிக்கெட் ஆட விடாமல் செய்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன்” என தெரிவித்திருந்தார். அந்த அளவிற்குப் பொறுமை மற்றும் எந்த நிலையிலும் நிதானத்தை இழக்காத மனுஷன் என்று கிரிக்கெட் உலகில் வர்ணிக்கப்படுபவர் தான் ராகுல் டிராவிட்.

Rahul Dravid unleashes his angry side in CRED advertisement

அப்படிப் பட்ட ராகுல் டிராவிட் அதற்கு நேர் எதிராகக் கோபத்தின் உச்சிக்குச் சென்றால் எப்படி இருக்கும் என்ற வகையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள விளம்பர படம் ஒன்று இணையத்தைக் கலக்கி வருகிறது. Cred என்ற கிரெடிட் கார்டு பில் செலுத்தப் பயன்படும் செயலி ஒன்றிற்காக அவர் நடித்துள்ள அந்த விளம்பர படம் தான் இந்த பரபரப்புக்குக் காரணம். அதில் அவர் டிராஃபிக் ஒன்றில் நிற்பது போலவும், அதில் டென்ஷன் ஆகி அருகில் இருப்பவர்களைக் கத்துகிறார்.

Rahul Dravid unleashes his angry side in CRED advertisement

ஒரு கட்டத்தில் கிரிக்கெட் பேட்டால் அருகில் நிற்கும் காரின் கண்ணாடியை அடித்து உடைக்கிறார். அவரை சுற்றி நிற்கும் மற்ற பொதுமக்கள் அனைவரும் ராகுலின் கோபத்தைப் பார்த்துப் பயந்து ஒதுங்கி நிற்பது போல இது படமாக்கப்பட்டுள்ளது. இதனை தற்போது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள விராட் கோலி, ராகுல் பாயின் இந்த பக்கத்தைப் பார்த்ததே இல்லை எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

Contact Us