சற்றுமுன் மணிவண்ணன் விடுவிக்கப்பட்டார்! சுமந்திரன் தலைமையில் கடும் வாதம்!

பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் சற்றுமுன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம.ஏ சுமந்திரன் தலைமையில் நிகழ்ந்த வாதத்தினடிப்படையில் முதல்வர் மணிவண்ணன் விடுவிக்கப்பட்டதாக யாழ் செய்திகள் கூறுகின்றன.

முன்னதாக முதல்வர் வி.மணிவண்ணன் யாழ். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120,332,343 இன் கீழ் மணிவண்ணன் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உட்பட 20 க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

Contact Us