சமையல் அறையில் பிறந்த இளவரசர் பிரிப்ஸ்- கிரேக்க நாட்டவரா இல்லை ரஷ்யரா என்பதில் கூட சந்தேகம் !

தனது 99 வயதுவரை வாழ்ந்து, எந்த ஒரு சந்தர்பத்திலும் எவராலும் விமர்சிக்கப்படாத மற்றும் சர்சையில் சிக்கிக் கொள்ளாத நபர் தான் இளவரசர் பிலிப். இவர் 1921ம் ஆண்டு ஜூன் 10ம் திகதி பிறந்தார். கிரேக்க நாட்டு இளவரசராக அவர் பிறந்தாலும். அப்போதைய கால கட்டத்தில் கிரேக்க நாட்டில் பெரும் யுத்தம் நிகழ்ந்து கொண்டு இருந்தது. அவரது பிரசவம் கூட சமையல் அறையில் ஒரு பாதுகாப்ப இடத்தில் தான் நடந்தது.

1922 டிசம்பர்(அடுத்த வருடம்) அவர்கள் வசித்து வந்த மாளிகையை ராணுவம் முற்றுகையிட்டது. பிலிப்பின் அப்பா ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அன் நிலையில் ஒரு வயதான இளவரசர் பிலிப்பை தொட்டி ஒன்றில் வைத்து, கடலோரம் நின்றிருந்த பிரித்தானிய போர் கப்பலுக்கு கொண்டு சென்றார் அவரது அம்மா. அங்கிருந்து தான் அவரது குடும்பம், பிரான்ஸ் சென்றது. பிரான்சில் படித்த பிலிப் பின்னர் ஜேர்மனியிலும் கல்விகற்றார்.

கிரேக்க தேசத்தில் பிறந்தாலும், டென்மார்க் நாட்டு இளவரசியின் மகன் தான் பிலிப். அவருக்கும் ரஷ்ய ராஜ குடும்ப இளவரசருக்கும் பிறந்த மகள் தான் பிலிப்பின் தாயார் என்று கூறப்படுகிறது. ஜேர்மனியில் படிப்பை முடித்துக் கொண்டு 18 வயதை எட்டிய பிலிப் பின்னர் பிரித்தானிய போர் கப்பல் ஒன்றில் பணிபுரிய ஆரம்பித்தார். அதனூடாக அவர் பிரித்தானிய படையிலும் இணைந்து கொண்டார்.

அவர் 18 வயதில் இருந்தவேளை, இளவரசியாக இருந்த எலிசபெத் என்ற பெண்ணை அவர் பாதுகாக்க வேண்டிய கடமையில் ஈடுபட்டார். அதனூடாக தான் இருவருக்கும் இடையே ஒரு நடப்பு மலந்தது. பின்னர் அது காதலாக மாறவே. ஜூலை 1947ம் ஆண்டு எலிசபெத் அம்மையாரை பிலிப் திருமணம் செய்து கொண்டார். பிரித்தானியாவை ஆண்டு வந்த மன்னர் ஜோர்ஜ் அவர்கள் இறந்ததன் பின்னர். முடிக்குரிய ராணியாக எலிசபெத் அம்மையார் அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து பட்டத்து இளவரசராக பிலிப் அறிவிக்கப்பட்டார்.

இது நாள் வரை நல்லதையே நினைத்து, நல்ல கருமங்களையே செய்துவந்த மாபெரும் சாந்தமான ஒரு மனிதர் தான் பிலிப். மிகவும் எழிமையானவர் என்பதும் குறிப்பிடத்தகக் விடையம் ஆகும். அவர் நினைவாக சில அரிய புகைப்படங்களை இங்கே இணைத்துள்ளோம் அதிர்வின் வாசகர்களுக்காக.

 

 

Contact Us