சிதைஞ்சு போயிடுவீங்க! சீனாவுக்கு தைவான் பகிரங்க எச்சரிக்கை! பரபரக்கும் உலக நாடுகள்!

A domestic constructed guided missile corvette ship launches flares during a drill at sea near the naval port in Kaohsiung in southern Taiwan on January 27, 2016. The Taiwanese military launched a series of mini military drills the last two days to display their determination to defend itself against China amid concerns if tensions would be stoked across the Taiwan Strait following the island’s recent presidential vote. AFP PHOTO / Sam Yeh / AFP / SAM YEH (Photo credit should read SAM YEH/AFP/Getty Images)

சீனா சமீப காலமாக தனது அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது.சீனா ஹாங்காங் நாட்டையும், தென் சீன கடல் பகுதியையும் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தென் சீன கடலில் ராணுவ கட்டமைப்புகளை பெருமளவில் அமைத்து வருகிறது. இதனையடுத்து சீனா, தைவான் நாட்டை தனது சொந்த பிரதேசமாக அறிவித்து அமைதியான முறையில் அல்லது ராணுவ பலத்தால் வெல்வோம் என்று தெரிவித்துள்ளது.

இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவின் மிரட்டலுக்கு அடிபணிய முடியாது எனத் தெரிவித்துள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்கா, தைவானுக்கு தனது ஆதரவை அளித்துள்ளது. மேலும் தைவானுடன் அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.இது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதால் ஏப்ரல் 5ம் தேதி சீனாவின் 10 போர் விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து தைவான் வெளியுறவு அமைச்சர் விடுத்த செய்திக்குறிப்பில் தைவான் தானாகவே தற்காத்து கொள்ளும். போரில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டால் போரில் ஈடுபடுவோம். தைவானில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசாங்கத்தை சீனா அங்கீகரிக்கவில்லை.தைவான் மக்களை அச்சுறுத்துவதை நோக்கமாக கொண்டு தைவானுக்கு அருகில் தங்களது ராணுவ விமானங்களையும், ராணுவ கப்பல்களையும் அனுப்பி வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Contact Us